Ezhil's Mathsmagic: Flash News: 31-08-2020

Monday 31 August 2020

Flash News: 31-08-2020

 

  • முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு.
  • பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீடிப்பு

  • தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5956, பலி  91.
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது. 
  • தமிழகத்தில் 30-08-2020 அன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6495, பலி  7231 ஆக உயர்வு.
  • புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பள்ளி ஆசிரியர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
  • செப்டம்பர் 1 முதல் 
  1. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை 1-9-2020 (நாளை) முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  2. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. 
  3. அனைத்து அரசு அலுவகங்களும் 100 % பணியாளர்களுடன் இயங்கும்.
  4. அனைத்து தனியார், வணிகவளாகங்கள், ஷோரூம் மற்றும் பெரிய கடைகள் 100% பணியாளர்களுடன் இயங்கும்.
  5. பெருநகர சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து 7-9-2020 முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 
  6. அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. 
  7. உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 
  8. வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. 
  9. ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. 
  10. திரைப்பட தொழிலுக் கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக் கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 
  11.  மாநிலங்களுக்கு இடையே யான ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்துக்குள் பயணியர் ரெயில்கள் செயல்பட 15-9-2020 வரை அனுமதியில்லை. 15-9-2020-க்கு பிறகு, தமிழ்நாட்டுக்குள் பயணியர் ரெயில்களை அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும். 
  12. மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங் களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். 

No comments:

Post a Comment