Ezhil's Mathsmagic: February 2021
Showing posts with label February 2021. Show all posts
Showing posts with label February 2021. Show all posts

Saturday, 27 February 2021

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு....

  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி முதலைமைச்சர் அறிவிப்பு.
  • 10 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல், அரசு ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கி, அதை உயர்த்திக் கொள்கிறார்கள்.
  • மக்கள் தேர்தலில் சரியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும்.


கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு...

  • கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கிடப்பில் போடப்பட்ட உள் ஒதுக்கீடு தற்போது தேர்தல் நேரம் என்பதால் நிறைவேற்றப்பட்டது.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் மொத்தம் உள்ள 20% இட ஒதுக்கீட்டில் 10.5% சதவீதம் வன்னியர்களுக்கும்,7% சீர்மரபினர்களுக்கும், இதர பிரிவினருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்..

 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்..Click here to download

2021 TAMILNADU ELECTION-APRIL 6....

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு

  • தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல்.
  • தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ல் தேர்தல் நடைபெறும். மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
  • அசாமில் 3 கட்டமாகவும் (மார்ச் 27, ஏப்ரல் 1,6), மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாகவும் (மார்ச் 27, ஏப்ரல் 1,6,10,17,22,26,29) தேர்தல் நடைபெறும். மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Friday, 26 February 2021

NMMS EXAM 2021 QUESTION AND ANSWER WITH EXPLANATION

  • NMMS EXAM 2021 SAT ANSWER WITH EXPLANATION - CLICK HERE

  • NMMS EXAM 2021 MAT ANSWER WITH EXPLANATION - CLICK HERE

அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு

  •  அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.
  • இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் - பொது மக்கள் கருத்து.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்...

 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரி / வட்டார கல்வி அதிகாரிகளின் அனுமதி பெறவில்லை என்றாலும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு. Click here to download Judgement Copy.

9,10,11 வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி....

  •  9,10,11 வகுப்பு மாணவ மாணவியர் அனைவரும் முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு.
  • அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்றாலும் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும்.- பள்ளிக்கல்வித்துறை
  • அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்பது சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு பொருந்தாது.

Monday, 22 February 2021

Today News 22.02.2021

  • புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஓட்டெடுப்பில் பெரும்பான்மையை இழந்தது.
  • தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்.
  • NMMS MAT-SAT  Answer key. Click here to download

Saturday, 20 February 2021

Today News 20.02.2021

  • நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு - கலந்தாய்வு பிப்ரவரி 27, 28 தேதிகளில் நடத்த இயக்குநர் உத்தரவு.
  • சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் விடுமுறை நாட்களில் 50% குறைப்பு.
  • அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.

Wednesday, 17 February 2021

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 உதவித்தொகை

 பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75000 உதவித்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

                                                Click here to download G.O.

Today News 17.02.2021

  • தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு.
  • தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
  • தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்த 2016 -ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. தமிழக அரசின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு,  8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க செப்டம்பர் 2020 உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று முறையிடப்பட்டது. இட ஒதுக்கீடு சட்ட பிரிவுகளை ரத்து செய்து 4 வாரத்தில் போட்டி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

12th PUBLIC EXAM Announced. May 3rd to 21st.

 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மே 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும்.

தேர்வு காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

தேர்வு அட்டவணை:

மே 3ம் தேதி : தமிழ்

மே 5ம் தேதி : ஆங்கிலம் 

மே 7ம் தேதி : கணினி அறிவியல் 

மே 11ம் தேதி: இயற்பியல், எகனாமிக்ஸ்.

மே 17ம் தேதி: கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோபயாலஜி.

மே 19ம் தேதி: உயிரியல், வரலாறு, பையோலஜி.

மே 21ம் தேதி: வேதியல், கணக்கு பதிவியல், புவியியல்.

                            Click here to download PDF

Saturday, 13 February 2021

Today News 13.02.2021

  • அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக மாற்ற ஆலோசனை.
  • TNPSC Departmental Exam Hall Ticket Published.
  • அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிறப்ப TRB போட்டி தேர்வு அறிவிப்பு.                             தேர்வு தேதி: ஜூன் 26,27. மார்ச் 1 முதல் 25 க்குள் ஆன்லைனில் வினப்பிக்கலாம். உடற்கல்வி இயக்குநர் நிலை -1=> காலியிடங்கள்:39. மற்ற பாடங்கள் அனைத்திற்கும் பயிற்று நிலை -1 =>காலியிடங்கள்:2098.

NMMS - உதவித் தொகை தேர்வு ஹால் டிக்கெட்...

 NMMS - உதவித் தொகை தேர்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட் 15 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

Friday, 12 February 2021

பொது தேர்வு விவரம் பதிவேற்ற அவகாசம்...

 பொது தேர்வு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றவும், தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறைகளை பல பள்ளிகள் முடிக்காததால், முடிப்பதில் சிரமம் இருப்பதால் வரும் 18 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2021 CENSUS ...

  •  2021 ஆம் ஆண்டு சென்சஸ் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் 8,754 கோடி ஒதுக்கியது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
  • தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58843 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். முகாமுக்கு வெளியே 34134 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். ஓடிசாவில் உள்ள முகாமில் 54 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்.
  • வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் விதிகளை மீறியதாக இதுவரை 20,600 தொண்டு நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 10 February 2021

Saturday, 6 February 2021

Today News 06.02.2021, Tax for PF, Permission letter for 9,11 class students

  • தமிழ்நாட்டில் Dream 11 விளையாட்டிற்கு தடை.
  • 9,11 வகுப்புகளுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம் - பள்ளிக்கல்வி துறை.
  • அண்ணாமலை மருத்துவ கல்லூரிகளை அரசு ஏற்றது.
  • ஜாக்டோ ஜயோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிப்ரவரி 8,9,10 நாட்களில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம்.
  • மொத்த சம்பளத்தில் 50% அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்க உத்தரவு. இதன் மூலம் PF சேமிப்பு பல மடங்கு உயரும். PF 2.5 லட்சத்திற்கு மேல் வந்தால் வரி விதிக்கப்படும் என்று BUDGET ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காக வரி கட்டி நாட்டின் பொருளாதாரத்தை கட்டி காக்கும் MIDDLE CLASS மக்களின் சேமிப்புகளை சுரண்டும் மத்திய அரசு.
  • 9,11 வகுப்பு தொடங்க அனுமதித்தல், வழிகாட்டு நெறிமுறைகள், பெற்றோரின் அனுமதி கடிதம் தொடர்பான கடிதங்கள். Click here to download