திருக்குறள் மெல்லிசை வடிவில் கேட்டு மகிழுங்கள்
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Pages
Sunday, 29 January 2023
Sunday, 15 January 2023
Wish you Happy Pongal
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!
இந்த தை திருநாள் மற்றும் பொங்கல் நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் முழுமையான ஆரோக்கியத்தோடும் அன்போடும் கூடிய மகிழ்ச்சி பொங்க இறைவனை வேண்டி பிராத்திக்கிறேன்.
தமிழர்கள் பண்டிகையான பொங்கல் திருநாளை சாதி, மதம் என்ற வேறுபாடுகளை மறந்து கொண்டாடுவோம். நாம் நினைத்திருந்தால் என்றோ பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழ்வதும், விவசாயமும் முக்கியமாக கருதியதால் அது சார்ந்த கருத்துக்களை, கோட்பாடுகளை பாடலாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். பல அந்நிய படையெடுப்புகளால் நம் அறிய பல இலட்சக்கணக்கான ஓலைச்சுவடிகளை அழித்தாலும், கிடைத்ததிலிருந்து இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல், கணித, வானவியல் கோட்பாடுகள் எந்த வசதியும் இன்றி அன்றே நாம் சொல்லியிருப்பதும், மருத்துவ உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல வியாதிகளுக்கும் தீர்வு சொல்லியிருப்பதும் நம் அனைவருக்கும் தெரிய வைப்போம்.
தமிழர்கள் என்றாலே உழைப்புக்கு பெயர் போனவர்கள். இன்றைய சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகளை கட்டமைத்ததில் நம் பங்கே அதிகம். அதனாலேயே சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழை இரண்டாவது ஆட்சி மொழியாகவும் ஜப்பான்,ஜெர்மனி, சீனா போன்ற பல நாடுகளில் அலுவல் மொழியாகவும் தமிழை வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்று நம்மில் பலர் உழைக்காமலே வாழ நினைப்பதால் பல மாநிலத்தவர்களும் நம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். விழித்துக் கொள்வோம். உழைத்து முன்னேற உறுதி ஏற்போம்.
நம் மறைக்கப்பட்ட வரலாறை பாடங்களில் பள்ளி பருவம் முதலே தெரிவிக்க வேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் சமுதாயம்!
