Ezhil's Mathsmagic: April 2021
Showing posts with label April 2021. Show all posts
Showing posts with label April 2021. Show all posts

Wednesday, 28 April 2021

தூத்துக்குடி மக்களின் உயிரைக்குடித்த ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக மட்டும் திறக்க முடிவு...

தூத்துக்குடி மக்களின் உயிரைக்குடித்த ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக திறக்க முடிவு...

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் மாசுக்களால் தூத்துக்குடி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக வழியில் அமைதியாக போராடிய மக்கள் போராட்டத்தில் சில விஷக்கிருமிகளின் ஊடுருவலால் வன்முறை உருவாக்கப்பட்டு 11 பேரை சுட்டு தள்ளிய அரசின் மீதும் போலீஸ்காரர்கள் மீதும் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கும் மக்களை காரணம் காட்டி மீண்டும் ஆக்சிஜன் பிரிவை மட்டும் திறக்கிறேன் என்று ஆலையை திறப்பது மக்கள் விரோத நடவடிக்கை. இதற்கு எதிர் கட்சிகளும் உடந்தை. 

திருச்சி பெல் கம்பெனியில் 5 ஆக்சிஜன் தயாரிக்கும் யூனிட் உள்ளது. அதை திறக்க அனைத்து கட்சிகளும் சேர்ந்து நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?

கொரோனா ௨வது அலை மிக அதிகமாக உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள்......

 கொரோனா ௨வது அலை மிக அதிகமாக உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், பெரிய வணிக வளாகங்கள், மால்கள், கடற்கரைகள், பூங்காகள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1 முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை....

 மே 1 முதல் அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. Click here to download Director proceedings

Monday, 19 April 2021

இந்திய மருத்தவம் மற்றும் ஓமியோபதி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பானம்....

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்தவம் மற்றும் ஓமியோபதி - ஆரோக்கியம் - தமிழக அரசு சிறப்பு திட்டம்.



1 முதல் 9 ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே திறனறி தேர்வு....

 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே திறனறி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு வீட்டிலிருந்தே பதிலளிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் அறிவுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் முடிவில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாநில அளவில் பட்டியல் தயாரித்து ,மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

+2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பு. செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கிறது.

 +2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பு. கொரோனா அதிகரிப்பால் +2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கிறது. +2 பொதுத்தேர்வு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

+2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை...

 +2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

ஏப்ரல் 16 முதல் செய்முறை தேர்வு தொடங்கியுள்ளன. செய்முறை தேர்வு உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பொதுத்தேர்வுக்கு படிக்க விடுமுறை நாட்களை பயன்டுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

18.04.2021 அன்று கொரோனா 10723 .....

 18.04.2021 அன்று கொரோனா 10723 ஆக பதிவானது. இறப்பு 42.

சென்னையில் மட்டும் 5093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Saturday, 17 April 2021

16.04.2021 அன்று 8449 பேருக்கு கொரோனா.....

 16.04.2021 அன்று 8449 பேருக்கு கொரோனா. கொரோனா 2 வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. போன வருடம் கூட 7000 க்குள் தான் கொரோனா பதிவானது. அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க், சமூக இடைவெளி, தேவையில்லாமல் ஊர் சுற்றுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடித்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழலாம்.

Breaking News: நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

  நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார்.

15.04.2021 அன்று கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இதயத்தில் இரத்தம் உறைந்து எக்மோ கருவியுடன் போராடி இன்று 17.04.2021 அதிகாலை 4.45 மணிக்கு இயற்கை எய்தினார். மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்து திடீரென்று இறந்தது அதிர்ச்சியாக உள்ளது.

Tuesday, 13 April 2021

கொரோனா 2வது அலை - புதிய 8 அறிகுறிகள்

 கொரோனா 2 வது அலை புதிய 8 அறிகுறிகளுடன் புது அவதாரம்.



Thursday, 8 April 2021

தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகள்...

 தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Click here to view and download

Friday, 2 April 2021

Tamilnadu Election - Important Messages and Explanation to Proceeding Officers

Tamilnadu Election - Training Video for PO,PO1,PO2,PO3

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பங்கு பெறக்கூடிய அணைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள். பதட்டமில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்துக்கள்.