Ezhil's Mathsmagic: January 2021
Showing posts with label January 2021. Show all posts
Showing posts with label January 2021. Show all posts

Sunday, 31 January 2021

NMMS Study materials

Today News 31.01.2021

  • பிப்ரவரி 8 முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர் அறிவிப்பு.
  • பள்ளிக்கல்வி துறையில் 4 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்-அரசாணை வெளியீடு.
  • G.O.307 - தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்., G.O.309 - தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமனம்.
  • ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பிப்ரவரி 13 க்குள் பட்டியல் வெளியிட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.-அமைச்சர் செங்கோட்டையன்.

Income Tax for the Assessment Year 2021-2022

 Income Tax Excel sheets for AY 2021-2022.


  1. Click here to download Format 1
  2. Click here to download Format 2

Thursday, 28 January 2021

Today News 28.01.2021

  • சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 ம் தேதி அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
  • தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீடிப்பு-மத்திய அரசு.
  • அகவிலைப்படி ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டது தொடரும்-

Monday, 25 January 2021

Today News 25.01.2021

  • கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி ரத்து - தமிழக அரசு.
  • 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளை திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்பு - அமைச்சர் செங்கோட்டையன்.
  • குடியரசு தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை.

Thursday, 21 January 2021

Education News 21.01.2021

  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த தனியார் பள்ளிகள் சங்கம் வழக்கு- தமிழக அரசு சுதந்திரமாக முடிவெடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
  • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா உறுதி.
  • குடியரசு தினத்தன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டாம். கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்.- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
  • தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்- கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.
  • மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு - மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு.
  • பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

Saturday, 16 January 2021

லாஜிஸ்டிக் துறை படிப்புகளும்...வேலை வாய்ப்புகளும்....

 என்ஜினீயரிங், மருத்துவம், நிர்வாக படிப்புகளிலும், அவை சார்ந்த பணிகளிலும் கவனம் செலுத்தும் நமக்கு, லாஜிஸ்டிக் துறை பற்றியும், அதிலிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் அதிகம் தெரிந்திருக்காது. லாஜிஸ்டிக் என்பது உலகளவில் அதிகப்படியான வேலைவாய்ப்பு நிறைந்த துறை. கொரோனா பேரிடர் காலத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிய துறை. நமக்கு பெரிதும் அறிமுகமில்லாத லாஜிஸ்டிக் துறையை, ஜெயஸ்ரீ பாலசந்திரன் முறைப்படி அறிமுகப்படுத்துகிறார். விரிவான விளக்கத்திற்கு Click here...

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலா ரூ.500 - அரசு அதிரடி...

வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வரும் 19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்பு வரும் 19ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைக்க உத்தரவிட்டுள்ளது.மேலும், விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் பள்ளிக்கல்வி துறையின் அந்த உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், 1173 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது.31 ஆயிரத்து 297 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 500 ரூபாய் வீதம் 1.56 கோடி ரூபாயை பள்ளிகல்வித்துறை விடுவித்துள்ளது. நிதியைப் பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


பள்ளிகளை திறப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

பள்ளிகள் திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் ஆகியவற்றை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. 

அந்த குழுவில் தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, அதே துறையை சேர்ந்த கூடுதல் இயக்குநர் அமிர்தாேஜாதி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களுடன் கல்வித்துறையை சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டவாரியாக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். 

முறைசாரா கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் மதுரை மாவட்டத்துக்கும்

சேலம்-ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி. 

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள்.-பள்ளிக் கல்வி இணை இயக்குநர் பொன்னையா. 

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு-இணை இயக்குநர் அமுதவல்லி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்கண்ட அதிகாரிகள் செல்வார்கள்.

Today News 16.01.2021

  • அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம் - மத்திய அரசு அறிவிப்பு.
  • அரசு ஊழியர்கள் துறை தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அறை அலுவலர் அறிவிப்பு.

இந்தியா ஏன் வல்லரசாகவில்லை!!!

 1937-லேயே நேதாஜி அவர்களால் கிடைக்க வேண்டிய விடுதலையை -பத்து வருடம் 1947-ல் காந்தியின் மூலமாகக் கிடைத்தது போல கொடுத்தார்கள் - பாராளுமன்றத்தில் பசும்பொன்னார் உரை.

"குருதியைத் தாருங்கள், விடுதலை பெற்றுத் தருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு இளைஞர்களிடேயே விடுதலை வெறியை ஊட்டியவர் 'நேதாஜி' என்று தாகூரால் பட்டம் சூட்டப்பெற்ற சுபாஷ் சந்திரபோஸ் -'ஜெய்ஹிந்த்' என்ற வீர முழக்கத்தை இந்தியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் (இதை இவர் செண்பகராமன் பிள்ளை மூலம் பெற்றார்).உண்மையில் நாம் 1947-ல் பெற்றது சுதந்திரமே அல்ல.அது தனக்கு விசுவாசமாக இருந்த காந்தி, நேரு போன்றோருக்கு பிரிட்டிஷாரா அதிகாரங்களை மட்டும் மாற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு.

ஜெனரல் டையரைச் சுட்டுக்கொன்ற உத்தம்சிங்கிற்கு கண்டணம் தெரிவித்தவர் காந்தி. இந்தச் சம்பவம் தான் காந்தி - போஸ் மோதலுக்கு முக்கியக் காரணம்.

1939-ல் காங்கிரஸ் தலைவராக போஸ் காந்தியின் எதிர்ப்பையும் மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, போஸின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் புரிந்து கொண்ட காந்தி. அவருக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் -( இதை விட அயோக்கியத்தனம் இருக்க முடியுமா?) இதைப் பார்த்த போஸ் மனமுடைந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியைத் தொடங்கினார்(அதன் தமிழகத் தலைவராக இருந்தவர் தேவர்).

அதன் பிறகு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட போஸ் அங்கிருந்து தப்பி ஆப்கன் வழியாக ஜெர்மன் சென்றடைந்தார். அங்கு ஹிட்லரைச் சந்தித்த போது எப்படி வரவேற்றார் தெரியுமா?” வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியே வருக என்று வரவேற்றார். அதே போல் தான் அடுத்ததாக ஜப்பான் பிரதமர் டோஜோ அவர்களும் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் அனைத்துமாக போஸ் இருப்பார் என்று தெரிவித்தார். ஆனால், இந்த இரண்டு இடங்களிலுமே போஸ் அவர்கள் கூறிய மறுமொழி "என் நாட்டின் சுதந்திரத்திற்கு உதவி மட்டுமே வேண்டும், நாட்டை ஆள்பவனை மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்பதே.. இப்பொழுது புரிந்திருக்கும் காந்தி, நேரு வகையறா ஏன் இவர் மேல் காண்டாக இருந்தார்கள் என்று.

உண்மையில் அறுபது ஆண்டுகளாக பள்ளிகளில் நாம் படித்து வருவது வரலாறு அல்ல.அது  வரலாற்றுத் திரிபு.

உண்மையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்திருக்க வேண்டியவர் பட்டேல் அவர்கள்தான். தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவர் தான் ஆனால் நேரு காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார்.

1945-ல் ஆகஸ்ட் 18 தேதி நேதாஜி தைவான் விமான விபத்தில் காலமானதாக அறிவித்தார்கள். ஆனால், அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை என்று தைவான் சொன்னது. ஒரு வேளை போஸ் மட்டும் முதல் பிரதமராக வாய்த்திருந்தால்…..

பாரதம் எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும்.         - படித்ததில் பிடித்தது.

Thursday, 14 January 2021

Today News 14.01.2021

  • மதுரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்பு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு.  பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி.
  • Safety & Security Training நிறைவு செய்யாத ஆசிரியர்கள் விவரம் கோரி மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
  • அணைத்து பள்ளிகளும் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து பயனீட்டு சான்றை ஜனவரி 20 க்குள் தாக்கல் செய்ய  மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
  • 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே மிகப்பெரிய கேள்வித் தொகுப்பு வழங்கிட வேண்டும் அந்தக் கேள்வித் தொகுப்பிலிருந்து தேர்வுக்குக் கேள்விகளை எடுக்கலாம் என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

CEO News 14.01.2021

 13.01.2021 புதன் கிழமை இன்று நடந்த CEO அவர்களின் meeting இல் கூறப்பட்ட தகவல்கள்:-

1. மாணவ/மாணவியர்கள் Water Can மற்றும் சாப்பாடு வீட்டிலிருந்தே கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்

2. Mask முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்

3. குடிதண்ணீர் உணவு snacks எதையுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது

4. கை குலுக்குதல் தொட்டு பேசுதல் தடை செய்ய பட்டுள்ளது

5. Revised syllabus விரைவில் அளித்து விடுவார்கள்

6. தேர்வை குறித்த பயம் தேவையில்லை,தேர்வு நிச்சயமாக நடைபெறும்

7. Class room, Lab maximum strength 25 students

8. 18.01.2021 திங்கள் கிழமை Team visit செய்வார்கள்

,9. All Teachers should come to school 9:30 to 4:30, No special classes, No evening class.

10.BT teachers should give 10th classes, PG teachers should give 12th classes, Other special teachers PET SGT maintain decipline   Thermal scanner, sanitizer.

11.அனைத்து மாணவ/மாணவியர்கள் காலை பள்ளிக்கு வருகை தந்தவுடன் பள்ளியின் நுழைவாயிலில் மூடப்பட்டிருக்க வேண்டும்

12.பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது

13. மாணவ/மாணவியர்கள் எவரேனும் உடல்நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு/சுகாதார நிலையத்திற்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும்.

14. விட்டமின் மற்றும் zinc   tablet பள்ளியிலே வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

15. No அசெம்பிளி prayer, No co- curricular activities, No Extra- curricular activities, No PET period, No sports.

16. பேருந்து பஸ் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் சைக்கிளில் வருவதை ஊக்கப்படுத்த வேண்டும் பெற்றோர் அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்

17. Concern Letter Parent Sign பெற்று மாணவ/மாணவியர்கள் வகுப்பாசிரியர் களிடம் சமர்ப்பிக்க வேண்டும் மாதிரிப் படிவம் வழங்கப்படும்

18. எந்த ஒரு மாணவரையும் வருகைப்பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது

19. பள்ளி வளாகத்துக்குள் கூட்டம் கூடுவது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

20. பள்ளி முடியும் நேரம்

10th std 4:15 மணிக்கும்

12th std 4:30 மணிக்கும் விட வேண்டும்

21. அனைத்து வித ஆசிரியர்களும் 18-01-21 முதல்100சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்

22 . ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு counseling மட்டுமே கொடுக்கப்படவேண்டும்.

23. அனைத்து ஆசிரியர்களும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு 19-01-21 முதல் பள்ளி செயல்படுவதை கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

Wednesday, 13 January 2021

Happy Pongal

 இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Today News 13.01.2021

  • 19.01.2021 பள்ளி திறக்கும் நாளன்று மாணவ மாணவியர்கள் அனைவரும் பெற்றோரிடம் கையொப்பம் பெற வேண்டிய படிவங்கள். Click here... 
  • பள்ளி திறப்பு குறித்த அரசாணை. Click here...
  • பள்ளி திறப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். Click here...

Monday, 11 January 2021

Today News 11.01.2021

  • NMMS Application online-ல் பதிவிட last date 12.01.2021.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு.
  • இந்தியாவில் ரூ.200  க்கு கொரோனா தடுப்பூசி விற்பனை - சீரம் நிறுவனம் தகவல்.

Thursday, 7 January 2021

Today News 07.01.2021

  • லண்டனில் மீண்டும் பொது முடக்கம்.
  • பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் 50 ஆசிரியர்கள் 10 மாணவர்களுக்கு கொரோனா.
  • தமிழகத்தில் வரும் 18ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு.
  • 5.32 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் கொள்முதல் - எல்காட் நிறுவனம்.
  • உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் உயர்நிலை ,  மேல்நிலை பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட ரூ.62 கோடி ஒதுக்கீடு.

Wednesday, 6 January 2021

Today News 06.01.2021

  • அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கும் பணி தொடங்கியது.
  • அரசு பள்ளிகளில் ஜனவரி 8 வரை பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்.
  • ஜனவரி 28 அன்று தைபூசம் - அரசு பொது விடுமுறை அறிவிப்பு.
  • பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு (SMC/SMDC) உறுப்பினர்களுக்கு 05.01.2021,06.01.2021 & 07.01.2021 நாட்களில் பள்ளி அளவில் காணொளி வாயிலாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  • உள்ளார்ந்த ஊக்க பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் இருபால் ஆசிரியர்களுக்கு SSTN மற்றும் STiR நிறுவனத்தின் சார்பாக பனிவான வணக்கங்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த இரண்டாவது கற்றல் சுழற்சியின் முதலாவது காணொளியை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். கற்றல் பாதையைக் கட்டமைத்தல் என்ற நோக்கத்தோடு நாம் ஆரம்பித்த இந்த LIC-யின் ஆசிரியர்களுக்கான இரண்டாவது காணொளி, வாசிப்பு பகுதி மற்றும் கூகுள் படிவம் போன்றவற்றை இந்த இணைப்பைக் கிளிக் செய்து பெற்றுகொள்ளலாம். https://www.intrinsicmotivationtn.org/lic2tm2.உங்கள் செயல்த்திட்டங்களை , சக-ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் போன்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு பின்னூட்டங்களை பெற்று அதற்கேற்ப செயல்திட்டங்களை மாற்றியமைத்து, இறுதியாக கூகுள் படிவத்தை நிரப்புங்கள். Timeline for teacher module 2  is 04.01.2021 to 18.01.2021.









Monday, 4 January 2021

Flash News 04.01.2021

  • C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - உச்சவரம்பு ரூ.3000/- . Click here for G.O.

Today News 04.01.2021

  • தமிழகத்தில் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து ஜனவரி 8 வரை கருத்து கேட்பு.
  • இனி ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்த ஆலோசனை.
  • அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.
  • ஜனவரி 9 ல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
  • கொரோனா தடுப்பூசி கோவாக்சின் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீரிக்கப்படவில்லை, மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வரவில்லை, அதற்குள் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
  • கூகிளின் பிழையை சுட்டிக்காட்டிய ஆவடியை சேர்ந்த ஸ்ரீராம் கேசவன் - பரிசுத்தொகை வழங்கிய கூகுள். கூகுளின் "Hall of Fame" ல் அவர் பெயரை இணைத்துள்ளது.