Ezhil's Mathsmagic: June 2020
Showing posts with label June 2020. Show all posts
Showing posts with label June 2020. Show all posts

Thursday, 4 June 2020

இன்றைய செய்திகள் - 4th June 2020

  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25872,  பலி 208 ஆக உயர்வு.
  • இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,815 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.
  • 'பொதுத்தேர்வில் பங்கேற்கும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 46 லட்சம் மறுபயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
  • ஜி7 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை அழைத்திருப்பது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ், ஜூன் 1ம் தேதி வரை, பொதுத்துறை வங்கிகள் ரூ.10,361.75 கோடி கடனுதவி அளித்துள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  •  கொரோனா பாதிப்புக்கு, பாரம்பரிய சித்த மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்து வருவதால், தனித்த சித்தா சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மையம், சென்னையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், சித்தா டாக்டர்களும் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
  • அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவருடைய சொந்த ஊரான, ஹூஸ்டனில், பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
  •  “இனப்பாகுபாடு என்பது வெறுப்புணர்ச்சி; அதை, நாம் அனைவரும் நிராகரிக்க வேண்டும்,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
  • அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  •  ''சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்,'' என ஒசாகா தெரிவித்தார்.
  •  ''சில நேரங்களில் அமைதியாக இருப்பது கூட ஒருவகையில் துரோகச் செயல் தான்,'' என ஒசாகா தெரிவித்தார். 
  • அமெரிக்காவில் போலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டார். பல்வேறு விளையாட்டு நட்சத்திரங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விண்டீஸ் கிரிக்கெட் வீரர் கெய்ல்,'கால்பந்தில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் இனவெறி உள்ளது,' என்றார்.

Monday, 1 June 2020

கல்விச் செய்திகள்

இன்றைய செய்திகள் - 1st June 2020

  • தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 1,149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் 22 ஆயிரத்து, 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
  • சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது
  • ரேஷன் கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று முதல் துவங்குகிறது.
  •  தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
  • வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது
  • ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது
  • தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
  • வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
  • மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்
  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது
  • இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.