Ezhil's Mathsmagic: December 2020
Showing posts with label December 2020. Show all posts
Showing posts with label December 2020. Show all posts

Thursday, 31 December 2020

Today News 31.12.2020

  • தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் - தமிழக அரசு அறிவிப்பு.
  • 01.01.2021 முதல் 100%ஊழியர்களுடன் ஐந்துநாட்கள் மட்டுமே வேலை நாட்கள்.
  • ஜன.2-ல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.

  • சுங்கச் சாவடிகளில் FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!

  • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடக்கம்!!

  • நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்த்தர்கள்  வரத்தடைவிதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கும் மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய செய்தியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் இ பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தளங்களுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை மெட்ரோ ரயில் சேவையில் Daily Pass வெறும் .100 கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். மெட்ரோ ரயில் நிலையத்தில் .150  செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திய பிறகு Daily Pass ஐ திருப்பி அளித்தால் .50 திருப்பி அளிக்கப்படும். இந்த பாஸை நண்பர்கள்,உறவினர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

  • சி.பி.எஸ்.சி.10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மே 8 முதல் ஜூன் 10 வரை நடைபெறும், ஜூலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு.

Wednesday, 30 December 2020

Today News 30.12.2020

  • திருவள்ளூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்.    நாள்:11.01.2021,நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை,  வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை-திருவள்ளூர் உயர் சாலை,திருநின்றவூர்,திருவள்ளூர் -602024. தொலைபேசி: 9865234765, 8248392780.
  • திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.

  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு- பள்ளிக்கல்வித்துறை முடிவு.

  • சம்பளம் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு Income Tax கணக்கு தாக்கல் நாளை கடைசி நாள் - தவறினால் 10,000 அபராதம்.

  • பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!

  • எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு; சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்.

  • கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு.

  • TN-EMIS Mobile TN EMIS App Update Now - New Version Available (28.12.2020).

  • புத்தாண்டு-2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

Monday, 28 December 2020

Today News 28.12.2020

  • நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்.
  • தமிழ்நாட்டில் ஜனவரி 17.01.2021 முதல் 23.01.2021 வரை ஏழு நாட்கள் போலியோ தடுப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
  • தற்போது RTI மூலம் தகவல்களை பெற இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

                   https://rtionline.tn.gov.in/request/request.php?lan=E

  •  பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். -தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழுவில் முடிவு.
  • இலவச யுபிஎஸ்சி பயிற்சி: விண்ணப்பிக்க ஜனவரி 20 கடைசி.
  • ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் – ஸ்டாலின்.

  • ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. டிசம்பர் மாத வழிகாட்டுதல்கள் ஜனவரியிலும் தொடரும்.பள்ளிகள் துவங்குவது குறித்த அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்ற டிசம்பர் மாத உத்தரவு நீடிக்கிறது.எனவே ஜனவரியில் பள்ளிகள் திறப்பை மாநிலங்கள் முடிவு செய்துக் கொள்ளலாம்.

  • நாட்டிலேயே முதல்முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரெயில்-டெல்லி மெட்ரோ ரயில்வே.

  • 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்.

Sunday, 27 December 2020

Today News 27.12.2020

  • சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநராக திருமதி.அமீர்தா ஜோதி IAS நியமனம்.
  • தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டி.என்.பி.எஸ்.சி., புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அமல்படுத்தப்படுமா என்று முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  • 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
  • மேற்கு வங்கத்தில் +2 மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் வாங்குவதற்கு அரசு சார்பில் ரூ.10000 வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
  • தமிழகத்தில், முதல்கட்டமாக ஐந்து லட்சம் சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Saturday, 26 December 2020

Today News 26.12.2020

  • நீலகிரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஜப்பான் ரூ.54 லட்சம் நிதியுதவி.
  • தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளி முன்னாள் மாணவர் ரூ.2 கோடி நன்கொடை.
  • 4 சக்கர வாகனங்களில் முன்புறம் உள்ள பம்பரை அகற்றாவிட்டால் ரூ.5000 அபராதம்.
  • மருத்துவ கல்லூரியில் 4 இடங்கள் காலியாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க தடை விதிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

Friday, 25 December 2020

Today News 25.12.2020

  • கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
  • School safety & security training 100 % முடிக்க TN-EMIS இணையதளம் மூலமாக ஆசிரியர்களின் login id and password மூலம் உள்ளே சென்று TN DIKSHA link மூலம் உள் நுழைந்து வெற்றிகரமாக முடிக்கலாம்.
  •  School safety & security training answers காண இங்கே சொடுக்கவும்.
  • தமிழக அரசு பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் - அமைச்சர் செங்கோட்டையன்.
  • தேசிய திறனாய்வு தேர்வு வரும் டிசம்பர் 27 ம் தேதி நடைபெறும்.
  • குரூப் 1 தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்.
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு 27 ம் தேதி வரை விடுமுறை.

Tuesday, 22 December 2020

Today News 22.12.2020

  • இன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் பிறந்தநாள் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் மருத்துவர்கள். செவிலியர்கள் பங்கேற்பு.
  • அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் ரூ.2500 வழங்க அரசாணை.
  • புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
  • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியீடு.
  • தொடக்கப் பள்ளிகளுக்கும் SMART CLASS ROOM திட்டம். பள்ளிகள் திறந்ததும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான வசதிகள் ஏற்படுத்த முடிவு-துறை வட்டாரங்கள். - நாளிதழ் செய்தி.
  • ஜனவரியில் 4 அல்லது பொங்கலுக்குப் பிறகு பள்ளிகளை திறக்க ஆலோசனை.

Friday, 18 December 2020

Today News 18.12.2020

  • 18.12.2020 & 19.12.2020 ஆகிய இரண்டு நாட்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு  School Safety and Security Training ல் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.
  • அடுத்த 5 மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை-பள்ளிக்கல்வித்துறை தகவல்.
  • தேர்தலில் பணியாற்ற விருப்ப படிவம் இன்றைக்குள் வட்டார கல்வி அலுவகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • தமிழகத்தில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.
  • கல்லூரிகள் மூலமாக பரவும் கொரோனா - அணைத்து ஐ.ஐ.டி.மற்றும் பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவு.
  • அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.- அமைச்சர் செங்கோட்டையன்.
  • தமிழக அரசு பிறப்பிக்கும் அரசாணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை - உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
  • Whatsapp மூலம் பணம் அனுப்பலாம். புதிய வசதி அறிமுகம்.

Sunday, 13 December 2020

Today News 13.12.2020

  • அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் Smart Card வழங்க ஏற்பாடு, அனைத்து முதன்மை கல்வி அலுவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது..
  • 50 % பாடத்திட்டம் குறைத்து 3 நாட்களில் அறிவிப்பு.-அமைசச்ர் செங்கோட்டையன்.
  • சுங்கச்சாவடியில் ஜனவரி 1 முதல் நேரடி கட்டணம் கிடையாது, fasttag இருந்தால் மட்டுமே அனுமதி. fasttag ல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
  • தமிழக அரசின் துறைகளில் இனி பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ்கள் அவசியம்.
  • டிசம்பர் 14 முதல் அனைத்து பெண் பயணிகளும் எவ்வித நேரக்கட்டுப்பாடின்றி பயணிக்கலாம்.
  • இணைய வழியில் நடக்கும் சர்வதேச அறிவியல் திருவிழா 2020, பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு பரிசுகள் முதல் பரிசு -7000,இரண்டாம் பரிசு -5000, மூன்றாம் பரிசு -3000. டிசம்பர் 22 முதல் 25 வரை நடைபெறும். விருப்பமுள்ள ஆசிரியர்கள், பள்ளி - கல்லூரி மாணவர்கள் கீழ்க்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.                                        www.scienceindiafest.org

Saturday, 12 December 2020

Today News 12.12.2020

  • ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்.
  • கூடுதல் கல்வி தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது.-உயர்நீதிமன்றம் உத்தரவு.
  • 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படும்.-அமைச்சர் செங்கோட்டையன்.

Friday, 4 December 2020

Today News 04.12.2020

  •  தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
  • 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
  • புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
  • கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று புயல் காரணமாக உள்ளூர் விடுமுறை-தமிழக அரசு.

Tuesday, 1 December 2020

Today News 01.12.2020

  • பள்ளிகளை உடனே திறக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கட்டணம், சுழல் நிதி ஏற்படுத்த அரசாணை வெளியீடு.
  • கற்போம் எழுதுவோம் திட்டம் தொடக்கம்.
  • நாளை முதல் 2 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிக மற்றும் அதி கன மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.