Ezhil's Mathsmagic: October 2020
Showing posts with label October 2020. Show all posts
Showing posts with label October 2020. Show all posts

Friday, 30 October 2020

30.10.2020

  • அரியர் தேர்வு ரத்து - மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - யு.ஜி.சி.
  • அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது.- ஐகோர்ட் கேள்வி.
  • கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு.
  • RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர்களுக்கான நிலுவை தொகையை டிசம்பர் 14 க்குள் செலுத்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
  • டிசம்பர் மாத இறுதிக்குள் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி,              80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்கள், 8828 ஆய்வங்களும் உருவாக்கப்படும்.
  • அக்டோபர் 29 ம் தேதி 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான TRB தேர்வில் முறைகேடு செய்த 196 பேர் பயோடேட்டா வெளியிட்டது.-ஆசிரியர் தேர்வு வாரியம்.
  • 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
  • INDANE GAS வாடிக்கையாளர்கள் இது வரை 8124024365 என்ற எண்ணில் காஸ் ஆர்டர் செய்தார்கள். இனி நவம்பர் 1முதல் 7718955555 என்ற எண் மூலமாக ஆர்டர் செய்ய வேண்டும்.
  • மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசானை வெளியிட்டது. - G.O.738 DATE.29.10.2020.

Thursday, 29 October 2020

Today News 29.10.2020

  •  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர் ஆகிய  8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு. சென்னைக்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.
  • சென்னை மயிலாப்பூரில் அதிகப்பட்சமாக 20 செ.மீ. மழை பெய்துள்ளது.
  • நவம்பர் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி.-C49 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் EOS-01 SATELLITE மற்றும் 9 வெளிநாட்டு சாட்டலைட்களும் அனுப்பப்படுகிறது.
  • இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000/- இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டத்தை  தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது.
  • புதிதாக tamilnadu.mygov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.

Tuesday, 27 October 2020

Today News 27.10.2020

  • குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் - மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
  • பாலிடெக்னிக் சேர்க்கை வரும் 31 வரை அவகாசம்.
  • பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு-தமிழக அரசு உத்தரவு.
  • அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் அரசு ஆசிரியர்கள் - குவியும் பாராட்டு.
  • ஆதார் கார்டில் பெயர் , பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை உங்கள் மொபைல் அல்லது கணினியின் வழியாக கீழ்க்காணும் இணையதள முகவரி மூலமாக திருத்தம் செய்யலாம்.
  • தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு "கற்ப்போம் எழுதுவோம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்வி மையங்களாக செயல்படும்-மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் பரமேஸ்வர முருகன்.
  • புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.770 தான்.
  • சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது - லண்டன் அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள்.

Monday, 26 October 2020

Today News 26.10.2020

  •  பள்ளி வேலை நாட்கள் பாதி விடுமுறையில் தீர்ந்து போனது. பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை.இனி முழு ஆண்டு தேர்வு தான்.- உயர் அதிகாரிகள் கருத்து.
  • ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஓ.பி.சி.பிரிவினருக்கு இந்த ஆண்டு 50% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவு இட முடியாது.- உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
  • தமிழகத்தில் 25.10.2020 அன்று 2869 பேருக்கு கொரானா பாதிப்பு.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூன்று வலைதளங்கள் வரும் 28ம் தேதி முதல் புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமாகிறது.
    • பழைய பக்கம்                                             புதிய பக்கம் 
    • www.tangedco.gov.in                                 www.tangedco.org
    • www.tantransco.gov.in                               www.tantransco.org
    • www.tnebltd.gov.in                                    www.tnebltd.org

Saturday, 24 October 2020

Today News 24.10.2020

  • 2019-2020 ஆண்டுக்கான வருமானவரி(Individual) கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு. For Companies - வருமானவரி கணக்குதாக்கல் செய்ய ஜனவரி 31 வரை காலக்கெடு நீட்டிப்பு.
  • அரசு அலுவகங்கள் இனி 100% ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். - தமிழக அரசு அறிவிப்பு.
  • 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் படங்களிலிருந்து அதிக கேள்வி கேட்கப்படும்.
  • கொரானா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 2886, உயிரிழப்பு 35.

Thursday, 22 October 2020

Today News 22.10.2020

  • நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
  • TET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்  (NCTE) அறிவிப்பு.
  • பள்ளிக்கல்வித்துரையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் - மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்.
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவிப்பு.
  • உயர் கல்வி நிறுவனங்களுக்கு புது உத்தரவு: தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த தயாராகிறது யுஜிசி.
  • தமிழகத்தில் 90000 அரசு பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • ஸ்ரீதர் வேம்பு! உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation)”, தலைமை நிர்வாக அதிகாரி(CEO)! ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்! அங்கு தான் இருந்தது. அதன் தலைமையகத்தை, போன ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் மத்தளம்பாறைஎன்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்! இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள்!

  • போலி சான்றிதழ் மூலம் சேர்ந்தவர்களை கண்டறிய அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள் தீடீர் சரிபார்ப்பு.

Wednesday, 21 October 2020

Today News 21.10.2020

  • இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன். இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
  • 40% பாடம் குறைக்கப்பட்ட பாடம் குறித்து இன்னும் 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.

Tuesday, 20 October 2020

Today News 20.10.2020

  • இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி மக்களிடம் உரையாடுகிறார்.
  • மத்திய வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
  • அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.
  • எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் அறிவித்தது டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசு. டெல்லி அரசு 1.5 லட்சம் கார்களுக்கும்,30000 ஆயிரம் இரு சக்கர வாகனங்களுக்கும் மானியம் அறிவித்தது.

Monday, 19 October 2020

Today News 19.10.2020

  • நீட் தேர்வில் தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்களே அதிகம் தேர்ச்சி. அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு அரசு முழு உதவி செய்ய வேண்டும்.
  • அமெரிக்காவின் கொலராடோவில் பயங்கர காட்டுத்தீ.
  • ராமாபும்,ராணிபேட் - 2019 ல் சிதிலமடைந்த அரசு பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்ட ஆரம்பித்து பாதியில் நின்று போனது.
  • மயிலாடுதுறையில் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.
  • 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முரளிதரன் கோரிக்கை.
  • வளிமண்டல சுழற்சி காரணமாக 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Thursday, 15 October 2020

Today News 15.10.2020


  • இன்று அக்டோபர் 15 - ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள். WORLD STUDENTS DAY and YOUTH INSPIRATION DAY.
  • BEO - ஊதியச் சான்று வழங்க மறுக்க இயலாது - CM CELL REPLY.
  • பள்ளிகள், தியேட்டர்கள், பூங்காக்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி.
  • மருத்துவப் படிப்பில் இந்த வருடம் இட ஒதுக்கீடு வழங்க இயலாது - மத்திய அரசு திட்டவட்டம்.
  • நாளை முதல் நடைபெற இருந்த NISHTHA பயிற்சி மறு அறிவிப்பு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.

Wednesday, 14 October 2020

Today News 14.10.2020

  •  அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் பற்றி தமிழக ஆளுநரின் செயலாளர் பிற்ப்பகல் 2.30 மணிக்குள் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Saturday, 10 October 2020

Today News 10.10.2020

  •  உபரியாக உள்ள ஆசிரியர்கள் விவரங்கள் தொடக்கக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
  • அரசு பணிகளில் நேரடி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்வு:தமிழக அரசு உத்தரவு.
  • ஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு : இனி 40 வயது முடிந்தால் பணி நியமனம் இல்லை.
  • தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services) மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு.

Friday, 9 October 2020

Today News 09.10.2020

  • அக்டோபர் 9 - சேகுவேரா நினைவுநாள். 
    • விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
    • விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
    • நீ ஊமையாய் இருக்கும்வரை உலகம் செவடாய்தான் இருக்கும்.
    • முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைபிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.
    • புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.
    • ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீயும் எனது தோழனே.  - சேகுவேரா.
  • தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் தேர்வு நிறுத்தி வைப்பு.
  • மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.
  • புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு.
  • இன்று 09.10.2020 - உலக தபால் தினம்.
  • தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

Wednesday, 7 October 2020

Today News 07.10.2020

  • சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children with Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள் :01.10.2020 - SPECIAL CASUAL LEAVE. CLICK HERE TO VIEW GO
  • பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல - கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
  • 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் - பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
  • அரசு சார்பாக தொலைக்காட்சிகளில் எடுக்கும் பாடங்களையொட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் - கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
  • ஆந்திராவில் பள்ளிகளுக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

Monday, 5 October 2020

Today News 05.10.2020

  • 04.10.2020 அன்று 5489  பேருக்கு கொரோனா தொற்று. 66 பேர் உயிரிழந்தனர்.
  • வாகனங்களின்  நம்பர் பிளேட் - கட்டுபாடுகளை அறிவித்த்து அரசு.
  • தள்ளிப்போகிறது  10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  - பள்ளி கல்வித்துறை ஆலோசனை.
  • Online Class - நாக்(NAAC) அங்கீகாரம் கட்டாயம் - யுஜிசி வழிகாட்டுதல்கள் வெளியீடு .
  • சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு  - சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து.
  • இன்று முதல் புறநகர் இரயில்களில் அரசு ஊழியர்கள், Nodal Officer Permission Letter மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் பயணிக்கலாம்.

Saturday, 3 October 2020

இன்றைய செய்திகள் 03.10.2020

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
  • இன்று 5,622  பேருக்கு கொரோனா தொற்று. 65 பேர் உயிரிழந்தனர்.
  • நேற்று நடைபெற்ற புதிர் போட்டிஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடந்ததற்கும் பள்ளிக்கல்வித்துரைக்கும் தொடர்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்.
  • CPS உள்ள ஆசிரியர்கள் பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data Centre வெளியீடு.
  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணி கேட்டு போராட்டம்.
  • நாளை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ... 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்.
  • வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல்.