Ezhil's Mathsmagic: November 2020
Showing posts with label November 2020. Show all posts
Showing posts with label November 2020. Show all posts

Monday, 30 November 2020

Today News 30.11.2020

  • டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.
  • டிசம்பர் 7 லிருந்து அனைத்து கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு திறப்பு.
  • டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆயிரக்கணக்கில் போராட்டம்.
  • அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம்.
  • தமிழத்திற்கு தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. நாளை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Saturday, 28 November 2020

Today News 28.11.2020

  • இன்று கொரோனா பாதிப்பு 1430, உயிரிழதோர் எண்ணிக்கை 13.
  • நவம்பர் 30 க்குள் கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக்கட்டணத்தையும் திருப்பித்தர உத்தரவு.
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களில் தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த நிலை புயலாக மாறினால் புரவி என்று பெயர் வைக்கப்படும்.
  • தமிழகத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட். 
  • பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை முதல்வரிடம் வழங்கப்படும்.- அமைச்சர் செங்கோட்டையன்.
  • ரயில் பேட்டிகள் போல வகுப்பறைகள் - ஓவியம் வரைந்து அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் -காணொளி

Friday, 27 November 2020

Today News 27.11.2020

  • வரும் 30 ஆம் தேதி முதல் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு.
  • அடுத்த வாரத்தில் மீண்டும் 2 புயல்கள் அடுத்தடுத்து தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி தமிழகத்தை நோக்கி வர உள்ளது.
  • முதல் முறையாக பொங்கல் அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை.
  • வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை - மத்திய அரசு அறிவிப்பு.

Thursday, 26 November 2020

Today News 26.11.2020

  • நிவர் புயல் நேற்றிரவு 10.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை புதுச்சேரிக்கும் மறக்காணத்திற்கும் இடையில் கரையை கடந்தது.
  • இன்று 7  மணி நிலவரப்படி திருப்பதி வழியாக வலுவிழந்து வெறும் புயலாக சென்று கொண்டிருக்கிறது.
  • உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். அரக்கோணம், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
  • நவம்பர் 29ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் - வானிலை ஆராய்ச்சி மையம்.

Thursday, 19 November 2020

Today News 19.11.2020

  • அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே 7.5% ஒதுக்கீடு, ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது - ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு.
  • தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்,ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம்.
  • 10,11,12 க்கு பொதுத்தேர்வு பற்றி டிசம்பர் இறுதியில் முடிவு-அமைச்சர் செங்கோட்டையன்.
  • திருப்பூர் மாவடத்தில் உள்ள அரசு பள்ளியில்(ஒரே பள்ளி) படித்த 4 மாணவியருக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
  • புதிய வயதுவந்தோர் கல்வி திட்டம் சார்பில் தன்னார்வலர்களுக்கு 2 நாள் பயிற்சி தொடங்கியது.
  • இன்று உலக ஆண்கள் தினம்.

Tuesday, 17 November 2020

Today News 17.11.2020

  • தமிழகத்தில் இன்று கொரோனா பதிப்பு 1652.
  • ஆசிரியர்கள், அரசு பணியாளர்கக்கு சட்டமன்ற தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடக்கம்.
  • அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி.Click here to download
  • கற்போம் எழுதுவோம் இயக்கம் - தன்னார்வல ஆசிரியர் கையேடு.            Click here to download Teacher's Module and download Non-Formal Book. 
  • ஆசிரியர்கள் தேர்வுநிலை பெற கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய தேவையில்லை.- CM CELL Reply.
  • விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கு Teacher Development Programme on ICT Facilities online training -  SS SPD Proceedings. Click here to download.

Monday, 16 November 2020

Today News 16.11.2020

  • வாக்காளர் பட்டியல் PDF Format ல் பார்க்க Click here to download. 
  • உங்கள் பூத் லெவல் ஆபீசர் யாரென்று அறிய Click here.
  • 2020-21 கல்வியாண்டுக்கான காலத்தை ஜூலை வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.
  • 10,11,12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஜுனில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.
  • ELECTION FORMS DOWNLOADS:
    • வாக்காளர் பட்டியலில் முதல் முறை பெயர் சேர்க்க, ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறியதால் பெயர் சேர்க்க Click here to download FORM 6.
    • வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க Click here to download    FORM 6A.
    • வாக்காளர் பட்டியலில் வேறொருவர் பெயர் சேர்க்க ஆட்சேபம், தன்னுடைய பெயரை நீக்க, இறப்பு மற்றும் இட  மாற்றத்தால் வேறொருவர் பெயர் நீக்க Click here to download FORM 7.
    • வாக்காளர் பட்டியலில் விவரங்களை திருத்த Click here to download FORM 8
    • ஒரே சட்டமன்ற தொகுதியில் ஒரு வசிப்பிடத்தில் இருந்து மற்றொரு வசிப்ப்டத்திற்கு மாற்ற Click here to download 8A.
    • வாக்காளர் புகைப்பட அட்டை கோரும் விண்ணப்பம் Click here to download FORM 001.
    • ANNEXURE-1
  • இன்று கொரோனா பாதிப்பு 1725, உயிரிழப்பு - 17.

Wednesday, 11 November 2020

Today News 11.11.2020

  • பள்ளி,கல்லூரிகள் திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு-தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்.
  • G.O.37 - ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்! பதவி உயர்வு, மாறுதல்களில் பயன்படுத்தாத விடுப்பு நாட்களை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க 6 மாதத்திற்குள்  விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது.
  • தீபாவளி அன்று மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
  • டிசம்பருக்குப் பிறகு பள்ளிகளை திறக்க அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்.
  • தமிழகத்திற்கு மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்'.
  • அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வு: முதல் 3 இடங்களை பெற்று தமிழக மாணவிகள் சாதனை.
  • காவேரிப்பாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தர் திரு.ஜலால் அவர்களின் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

Saturday, 7 November 2020

Today News 07.11.2020

  • தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க அனுமதி.
  • அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கிடையாது - முதலமைச்சர் அறிவிப்பு.
  • நவம்பர் 9 ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறக்க பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.- பள்ளிக்கல்வி துறை.
  • பெற்றோரிடம் கருத்து கேட்புக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்.
  • தமிழகத்தில் 07.11.2020 - இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு.
  • அமெரிக்காவின் 46 ஆவது அதிபர் ஜோ பைடன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Sunday, 1 November 2020

Today News 01.11.2020

  • நவம்பர் 16 முதல் 9,10,11,12 வகுப்புகள் மற்றும் கல்லூரிகள்,பணியாளர் விடுதிகள்  செயல்படும் - தமிழக அரசு உத்தரவு.
  • நவம்பர் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.- தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.
  • நவம்பர் 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி. காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் 16 முதல் செயல்படலாம்.
  • பொழுதுபோக்கு மற்றும் உயிரியல் பூங்காக்கள், பெரிய அரங்குகள், திரையரங்குகள் நவம்பர் 10 முதல் செயல்பட அனுமதி.
  • சி.ஏ. தேர்வு நவம்பர் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும்-ஐ.சி.ஏ.ஐ. விளக்கம்.
  • 31.10.2020  அன்று 2511 பேர் கொரோனாவால் பாதிப்பு. 31பேர் உயிரிழப்பு.