Ezhil's Mathsmagic: இன்றைய செய்திகள் - 1st June 2020

Monday 1 June 2020

இன்றைய செய்திகள் - 1st June 2020

  • தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய உச்சமாக, நேற்று ஒரே நாளில், 1,149 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் 22 ஆயிரத்து, 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
  • சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது
  • ரேஷன் கடைகளில், இம்மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், இன்று முதல் துவங்குகிறது.
  •  தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
  • வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது
  • ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது
  • தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
  • வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்
  • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
  • மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்
  • அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது
  • இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்
  • இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது
  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment