NMMS EXAM - INTRODUCTION
NMMS EXAM என்பது National Means Cum Merit Scholarship ஆகும்.
NMMS EXAM எழுத தகுதிகள்:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவ,மாணவியர்களுள் 7 ஆம் வகுப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம். SC/ST மாணவ,மாணவியர்கள் 50% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
- மாணவ,மாணவியரின் பெற்றோர் வருமானம் ஆண்டுக்கு 1,50,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தொடர்ந்து பள்ளிக்கு வருபவராக (Regular Student) இருக்க வேண்டும்.
இதில் இரண்டு தேர்வுகள் உள்ளன. மொத்தம் 180 கேள்விகள். 1.மனத்திறன் தேர்வு(Mental Ability Test)-90கேள்விகள் - 90 மதிப்பெண்கள் - 90நிமிடங்கள்.
9.30 மணியிலிருந்து11.00 மணி வரை தேர்வு நடைபெறும்.
காரணம் அறிந்து சிந்தித்து பகுப்பாய்ந்து விடையளிக்கும் கேள்விகள் கேட்கப்படும்.
30 நிமிடங்கள் இடைவேளை.
2. படிப்பறிவுத் திறன் தேர்வு(Scholastic Aptitude Test) - 90 கேள்விகள் - 90 மதிப்பெண்கள் - 90நிமிடங்கள்.
11.30 மணியிலிருந்து 1.00 மணி வரை தேர்வு நடைபெறும்.
கணிதம் தொடர்பான கேள்விகள் - 20 மதிப்பெண்கள் , அறிவியல் தொடர்பான கேள்விகள் - 35 மதிப்பெண்கள், சமூக அறிவியல் தொடர்பான கேள்விகள் - 35 மதிப்பெண்கள்.
7 ஆம் வகுப்பு 3 பருவமும், 8 ஆம் வகுப்பு 2 பருவத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
MAT, SAT EXAM ஒவ்வொன்றிலும் 40%(90 க்கு 36 மதிப்பெண்கள்), SC/ST மாணவர்கள் 32% (90 க்கு 29 மதிப்பெண்கள்) எடுத்தால் வெற்றி பெறலாம்.
மொத்தமாக 180 க்கு 72, SC/ST மாணவர்கள் 180 க்கு 58 எடுத்தால் வெற்றி பெறலாம்.
இந்த தேர்வு எழுத கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு 6695.
No comments:
Post a Comment