Ezhil's Mathsmagic: Today News 31.12.2020

Thursday 31 December 2020

Today News 31.12.2020

  • தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் - தமிழக அரசு அறிவிப்பு.
  • 01.01.2021 முதல் 100%ஊழியர்களுடன் ஐந்துநாட்கள் மட்டுமே வேலை நாட்கள்.
  • ஜன.2-ல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.

  • சுங்கச் சாவடிகளில் FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!

  • தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடக்கம்!!

  • நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்த்தர்கள்  வரத்தடைவிதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கும் மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய செய்தியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் இ பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தளங்களுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • சென்னை மெட்ரோ ரயில் சேவையில் Daily Pass வெறும் .100 கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். மெட்ரோ ரயில் நிலையத்தில் .150  செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திய பிறகு Daily Pass ஐ திருப்பி அளித்தால் .50 திருப்பி அளிக்கப்படும். இந்த பாஸை நண்பர்கள்,உறவினர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

  • சி.பி.எஸ்.சி.10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மே 8 முதல் ஜூன் 10 வரை நடைபெறும், ஜூலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு.

No comments:

Post a Comment