Ezhil's Mathsmagic: Today News 02.01.2021

Saturday 2 January 2021

Today News 02.01.2021

  • ஜனவரி 3ஆம் தேதி (நாளை) குரூப் 1 முதல்நிலை தேர்வு, ஜனவரி 9,10ஆம் தேதிகளில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வுதேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்குத் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டு காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.விடைத்தாளில் A, B, C, D மற்றும் (E) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரியக் கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணிலிருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும். 
  • இனி 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் காஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.
  • பணியின் போது ஊனம் ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு:மத்திய அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் அறிவிப்பு.
  • தேர்வு நிலை(Selection grade) மற்றும் சிறப்பு நிலை (Special grade) பெறப்போகின்ற ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் முறையான நியமன ஆணை மற்றும் நிரந்தர நியமன ஆணை என்று பணி நியமன ஆணையில் இடம்பெற்றிருந்தால் அவர்கள் பணி வரன்முறை செய்ய தேவை இல்லை. பதவி உயர்வு பெற்றால் மட்டுமே பணி வரன்முறை செய்ய வேண்டும். வேறு மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்று மதிப்பீடு செய்து பணி நியமனம் பெற்று இருந்தால் அவர்கள் உண்மைத்தன்மை பெற தேவையில்லை மேலும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டய சான்றிதழ் பெற்றவர்கள் உண்மைத்தன்மை பெற தேவையில்லை. பணிவரன்முறை செய்ய விரும்புகின்ற ஆசிரியர்கள் அதற்குண்டான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்களை வட்டார கல்வி அலுவலகத்தில் சேர்க்குமாறு கோரப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment