Ezhil's Mathsmagic: தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்....

Sunday 15 August 2021

தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட்....

 தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 14  அன்று தாக்கல்.


வேளாண்மைக்கு  என்று தனியாக பட்ஜெட் முதன்முறையாக சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 14  அன்று தாக்கல் செய்யப்பட்டது.

  • பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவரின் அனுமதி கட்டாயம்.
  • பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க 36 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகளும் ஒருலட்சம்மரக்கன்றுகளும் முழு மானியத்தில் வழங்கப்படும்.
  • நியாயவிலை கடைகளில் பனங்கருப்பட்டி விற்க நடவடிக்கைஎடுக்கப்படும்.
  • ஒரு குவிண்டால் சன்னரக நெல் 2060 க்கும் சாதாரண நெல் 2015 க்கும் கொள்முதல்செய்யப்படும்.
  • நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க 52.02 கோடியில் தார்பாய்கள் வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்திற்கு மின் வாரியத்திற்கு 4508.23 கோடி நிதி வழங்கப்படும்.
  • சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கு மானியம் 114.68 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • நடப்பு ஆண்டில் 5000 சூரிய சக்தி பம்பு 70% மானியத்தில் நிறுவப்படும்.

No comments:

Post a Comment