Ezhil's Mathsmagic: பள்ளி பரிமாற்றுத் திட்டம் 2022

Saturday, 26 February 2022

பள்ளி பரிமாற்றுத் திட்டம் 2022

 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி பரிமாற்றுத் திட்டம்.


இந்த ஆண்டு பள்ளி பரிமாற்றுத் திட்டத்தில் உள்ள இரு பள்ளிகளின்  மாணவர்கள் யாரும் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டாம், அந்தந்த பள்ளியிலேயே இருக்க வேண்டும். இதற்காக 2  ஆசிரியர்களும் ( கணினி தெரிந்தவர் ஒருவர்) மற்றும் 6,7,8 வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 5 மாணவர்கள் வீதம் 15மாணவர்களை ஒரு வகுப்பில் உட்கார வைத்து, வேறு பள்ளியின் கணினி தெரிந்த ஆசிரியர் காலை 10.00 மணி முதல் 3.45 மணி வரை இத் திட்டத்தின் கீழ் அவர்தம் பள்ளியின் சிறப்புகளையும், அவர் பள்ளி அமைந்துள்ள ஊரின் சிறப்புகளையும் ஊரைச் சுற்றி உள்ள முக்கிய தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை POWERPOINT PRESENTATION, PHOTOS, VIDEOS மூலம் விளக்கி கூறுதல். 3.00 மணி முதல்  3.30 மணி வரை இரு பள்ளி மாணவர்களும் கலந்துரையாட வேண்டும். 3.30 மணி முதல்  3.45 மணி வரை மாணவர்களின் கருத்துகளை(feedback) எழுதச் செய்ய வேண்டும்.  

மாநில திட்ட இயக்ககத்தின் நெறி முறைகள் :   பள்ளி பரிமாற்றுத் திட்டம்


பள்ளி பரிமாற்றுத் திட்டம் - மாதிரி POWERPOINT PRESENTATION - இங்கே க்ளிக் செய்யவும்


POWERPOINT SHOW - பார்க்க - இங்கே கிளிக் செய்யவும் 


No comments:

Post a Comment