Ezhil's Mathsmagic: இன்றைய செய்திகள் 23.09.2020

Wednesday 23 September 2020

இன்றைய செய்திகள் 23.09.2020

  • 22/09/2020 அன்று  கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை.  கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: தமிழகத்தில்  -  5337 
  • கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: தமிழகத்தில் -76, சென்னையில்  -  17 
  •  இதுநாள் வரை  கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை: தமிழகத்தில்  -  8947 ,சென்னையில்  -  3091
  • அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டார கல்வி அலுவலர்களுக்கு,  பள்ளிக்கல்வி செயலர், ஆணையர் இயக்குநர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் வரும் 28.09.2020 அன்று காணொலி வழியாக நடைபெறுகிறது.
  • தமிழக அரசு மற்றும் STiR education சார்பாக இருபால் ஆசிரியர்களுக்கும் பணிவான வணக்கங்கள். உள்ளார்ந்த ஊக்க பயிற்சி திட்டத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். இந்த ஆண்டின் ஆசிரியர்களுக்கான முதல் கற்றல் மேம்பாட்டு சுழற்சியின் நோக்கம் “சமூக-உணர்ச்சி நல்வாழ்வு”, இந்த கற்றல் சுழற்சியின் முதலாவது காணொளி,வாசிப்பு பகுதி மற்றும் பின்னூட்ட கருத்து படிவம்(Google Form) கீழே உள்ள Link கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். மகிழ்ச்சியான கற்றலுக்கு வாழ்த்துக்கள். https://www.intrinsicmotivationtn.org/teachers
  • சீன அதிபரை ‘கோமாளி’ என விமர்சித்த பிரபல தொழிலதிபர் - ஊழல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறைதண்டனை.
  • பள்ளிக்கல்வித்துறை இந்த மாதம் வெளியிட்டுள்ள 2020-2021 கல்வியாண்டுக்கான திருந்திய பதிப்பு Revised Edition அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்களும் ஒரே கோப்பில் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பு : அனைத்து புத்தகங்களும் இந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையால் பதிவேற்றம் செய்யப்பட்டவை. click here to download
  • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும்.15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.

No comments:

Post a Comment