- தமிழகத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவ, மாணவிகள் வந்து செல்லலாம் என்றும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும். 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. Click here to download G.O. PDF DOCUMENT.
இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை: 5692
- இன்று உயிரிழப்பு : 66 .
- புறநகர் இரயில் சேவை மிக விரைவில் தொடங்க உள்ளது.
- பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்.
- ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
- CPS Missing Credit விபரங்களை 30.09.2020க்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவு - ஆணையர் கடிதம்
- G.O 37 - உயர் கல்வி ஊக்க ஊதியத்தை நிறுத்துவது தொடர்பாக கருவூலங்களுக்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்க வில்லை - RTI Reply
No comments:
Post a Comment